சந்திரயான் 3 வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

by Staff / 14-07-2023 04:16:16pm
சந்திரயான் 3 வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி நிலையத்திலிருந்து ‘ஜிஎஸ்எல்வி மார்க் 3’ ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம் 2.35 மணிக்கு ‘சந்திரயான்-3’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், “சந்திரயான்-3 விண்வெளியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. ஒவ்வொரு இந்தியனின் கனவுகளும், லட்சியங்களும் உயரமாக பறக்கிறது. இந்த சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via