விஜயகாந்த் பிறந்தநாளுக்கு அண்ணாமலை வாழ்த்து

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று ஆகஸ்ட் 25 ஆம் தேதி தன் 71 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அடுத்து அவருக்கு பல அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், எளிய மக்கள் மீது பேரன்பு கொண்ட பண்பாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து, விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Tags :