சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் உதவி

by Admin / 04-08-2021 03:20:17pm
சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் உதவி


   
திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு ரூ.1.55 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் 2021-2022 ம் நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு ரூ.1.55 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக்கடன், கைவினை கலைஞர்களும் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். மேலும் கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்துக்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர்உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
 
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 9445477854 அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via