சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற டபுள் டெக்கர் ரயில் தடம் புரண்டது.
சென்னையிலிருந்து பெங்களூரூ செல்லும் டபுள் டெக்கர் ரயிலின் D1பெட்டியின் சக்கரம் தரையில் இறங்கி விபத்து. கர்நாடாக மாநிலம் குப்பம் கேஜிஎப் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றபோது விபத்து. இன்று காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்திற்கு டபுள் டெக்கர் ரயில்(22625) தினசரி ரயிலாக சென்று வருகிறது.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல் டபுள் டக்கர் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு குப்பம் ரயில் நிலையத்தை கடந்து காலை சரியாக 11.15 மணியளவில் பங்காருபேட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பிரேக் பெட்டிக்கு அருகே இருந்த C1 ஏசி பெட்டி தடம் புரண்டுள்ளது ரயிலின் பெட்டி புரண்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.
ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கபட்டது. இதனையடுத்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ரயில் தடம்புரண்டதால் இந்த வழித் தடத்தில் செல்லும் ரயில்கள் தாமதமாகவே சென்றன.
Tags :