டிச., 22ஆம் தேதி வலுவடைகிறது  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.

by Editor / 20-12-2024 07:02:20am
டிச., 22ஆம் தேதி வலுவடைகிறது  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் (டிச.22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

“புதுச்சேரிக்கு கிழக்கே நிலைகொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது இன்று (டிச.20) வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிச.20) முதல் டிச.25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


 

 

Tags : டிச., 22ஆம் தேதி வலுவடைகிறது  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.

Share via