தொடர்ந்து தங்கம் விலை சரிவு

by Staff / 11-08-2023 01:15:05pm
தொடர்ந்து தங்கம் விலை சரிவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,485-க்கும், ஒரு சவரன் ரூ.43.880-கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைவதால், தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை சரிந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via