தொழிலாளியிடம் பணம் பறித்த 2 பேர் கைது
சேலம் சித்தர் கோவில் அருகே உள்ள நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தீபக்ராஜ் (வயது 27). இவர் மணியனூரில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று தொழிற்சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் தீபக்ராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டல் அவரிடம் இருந்த ரூ. 1, 600-ஐ பறித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட தாதகாப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (47), வள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல் கரீம் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Tags :