வேலைக்கு லஞ்சம்.. செந்தில் பாலாஜியை தவிர இடைத்தரகர்கள் யார் யார்?

போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜியை தவிர இடைத்தரகர்கள் யார் யார்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பணம் பெற்றுக்கொண்டு நியமன ஆணை வழங்கிய அதிகாரிகள் யார் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஒவ்வொரு வழக்கிலும் 900, 1000 என குற்றம்சாட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை இருந்தால் வழக்கு விசாரணை எப்போது முடிவடையும்? இப்படியே போனால் எத்தனை ஆண்டுகளானாலும் வழக்கு முடியாது என்றனர்.
Tags :