மகளிர் உரிமைத்தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பம்

மகளிர் உரிமைத்தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது, உங்களிடம் ஸ்டாலின் முகாம் மூலம் பெறப்பட்ட 5.88 லட்சம் விண்ணப்பங்களின் நிலை சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து அதிகபட்சமாக 45 நாட்களில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளதா என தகவல் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் புதியதாக இணைந்தவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என அரசு வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags :