மீனவர் தின சிறப்பு கொண்டாட்டம்

by Editor / 21-11-2021 01:40:32pm
 மீனவர் தின சிறப்பு கொண்டாட்டம்


அகில உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம்  மார்த்தாண்டம் புனித சவேரியார் ஆலயத்தில் மீனவர் தின சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பங்குத்தந்தை ராஜேஷ் பிலிப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி பராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்க்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பெண்கள் திலகம் இட்டும் பூங்கொத்துக்கள் கொடுத்தும் வரவேற்றனர். மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை விஜய் வசந்த் எம்.பி-யிடம் கொடுத்தனர். சிறப்பு ஜெபத்தை தொடர்ந்து கேக் வெட்டப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன்பின்னர் ஆலய பங்கை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் - போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் மகேஷ் லாசர்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார்,குழித்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ், மாவட்ட மனித உரிமை துறை தலைவர் ரவிசங்கர் மற்றும் ஆலய நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via