ஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

by Editor / 06-08-2024 12:15:18am
ஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

தென்காசி மாவட்டம், சின்னக்கோவிலாங்குளம் காவல் நிலைய கொலை வழக்கின்   குற்றவாளியான சேத்தூர் மேட்டுப்பட்டி குருசாமி என்பவரின் மகன்  செந்தூர்குமார்@ வெள்ளையன் (24), கடையநல்லூர் காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளியான மேலக்கடையநல்லூர் கிருஷ்ணன் என்பவரின் மகன் முருகன்(46) மற்றும் தென்காசி காவல் நிலைய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் குற்றவாளிகளான குத்துக்கல்வலசை சீதாராமன் என்பவரின் மகன் சக்திவேல் (26), இடைகால் துரைசாமியாபுரம் பெருமாள் சாமி என்பவரின் மகன் ராமகிருஷ்ணன்(28), ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்  பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல்கிஷோர்  உத்தரவின் பேரில் மேற்படி நான்கு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags : ஒரே நாளில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

Share via