கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 05-08-2024 05:09:09pm
கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

கோவை அருகே உள்ள ராமநாதபுரம் சூரியன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஹரிணி (20).
ஹரிணி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்த அவரது சகோதரி தந்தை ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். ராஜேந்திரன் விரைந்து சென்று ஹரிணியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்யும் முன்பு ஹரிணி அவரது சகோதரிக்கு செல்போனில் வயிற்று வலி பிரச்சனையால் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக மெசேஜ் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via