விடுமுறை: 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

by Staff / 12-04-2023 01:00:32pm
விடுமுறை: 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், 13ஆம் தேதி வியாழக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories