வேதியியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு.
வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் டபிள்யு சி மேக்மில்லன் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி,மருத்துவத்துறை,இயற்பியலுக்கான நோபல் பரிசு இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட்,அமெரிக்காவின் டேவிட் டபிள்யு சி மேக்மில்லன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியலில் தற்போது இருவித வினையூக்கிகளே உள்ள நிலையில் மூன்றவதாக சமச்சீரற்ற ஆர்கனோகாடாலிசிஸ்(asymmetric organocatalysis) என்ற வினையூக்கியை கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
Tags :




1.jpg)














