வாடிக்கையாளரை போன்று வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி போதைப்பொருள் பறிமுதல் செய்த காவல்துறையினர்

by Editor / 31-07-2022 05:50:42pm
வாடிக்கையாளரை போன்று வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி போதைப்பொருள் பறிமுதல் செய்த காவல்துறையினர்

வாடிக்கையாளர் போன்று  வாட்ஸ்அப் வீடியோவில் அனுப்பி இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்த காவல்துறை இருவரை கைது செய்தது. மதுரவாயல் சேர்ந்த வெங்கடேஷ் போதை பொருளே விற்பதாக தகவல் கிடைத்த நிலையில் வாடிக்கையாளர் போன்று அவரை தனிப்படை காவல்துறையினர் வாட்ஸப்பில் தொடர்பு கொண்டனர். ஒரு கிலோ போதைப் பொருளுக்கு 6 லட்ச ரூபாய் கேட்டதோடு பணத்தை செய்தித்தாளில் சுற்றி அதன் மேல் கேஸ் எழுதுமாறு கூறி அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு கூறுகிறார். தன்னிடமுள்ள மெத்தா பெட்டமைன் போதை பொருளை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி இருக்கிறார். போதைப்பொருளை நேரில் கொடுக்க ராயபுரம் வந்த வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளி சிவசந்திரன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் மெத்தா பெட்டமைன் பறிமுதல் செய்தது
 

 

Tags :

Share via