திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியின் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியின் திருமயம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து தமிழக வெற்றிக்காக வேட்பாளர் சிந்தாமணி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் சிந்தாமணியின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோன்று பொன் .பன்னீர்செல்வம் என்பவர் தொடர்ந்து தேர்தல் வழக்கும் விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திமுக வேட்பாளர் ரகுபதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் சிந்தாமணியை விட 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :

















