காதலன் பிறப்புறுப்பை வெட்டிய வாலிபர்

by Staff / 12-09-2022 01:10:11pm
காதலன் பிறப்புறுப்பை வெட்டிய வாலிபர்

உத்தரப்பிரதேசம்: பரேலி மாவட்டத்தில் உள்ள சிவில் லைன்ஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சனிக்கிழமையன்று 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது 30 வயது காதலனின் பிறப்புறுப்பை வெட்டியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது தன்பாலின ஈர்ப்பாளர்களான இருவரும் பரேலி முனிசிபல் கார்ப்பரேஷனில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

கடந்த ஓராண்டு காலமாக நெருக்கமாக பழகி வந்த இருவரும் அவ்வப்போது ஹோட்டலில் ரூம் எடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதை அவர்களில் 30 வயது நபர், 32 வயது நபருக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். அதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி அவரிடம் பணமும் பறித்துள்ளார். இதையெல்லாம் பொறுத்து கொண்ட 32 வயது நபர் மீண்டும் தனது காதலனை ஹோட்டலில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார்.

அன்று அந்த வீடியோ டெலிட் செய்ய கோரி கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த 30 வயது நபர் போக்கு காட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தான் அங்கிருந்த ஒரு கூர்மையான பொருளை எடுத்து வீடியோ எடுத்த இளைஞரின் அந்தரங்க உறுப்பை காதலன் வெட்டியுள்ளார். இருப்பினும், இது தொடர்பாக இரு ஆண்களும் புகார் அளிக்கவில்லை. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று போலீசார் குறிப்பிட்டு உள்ளனர்.

 

Tags :

Share via