ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழப்பு.?

by Editor / 17-10-2023 09:48:23pm
 ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழப்பு.?


விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ள M. புதுப்பட்டி  பட்டாசு ஆலை முன்பு செயல்பட்ட பட்டாசு கடையில் நடந்த வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். நிகழ்விடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

 அதோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர்.இதே போன்றுசிவகாசியை சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவுக்கு உட்பட்ட போடு ரெட்டியாபட்டியில் இயங்கி வருகிறது. 

 இந்த பட்டாசு ஆலையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.  இதில் இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த வேம்பு என்கிற தொழிலாளி உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிர் இழந்தார்.  

தகவல் அறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரு விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில் இந்த விபத்துகள் தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தொழிற் பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் அடங்கிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :  ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 14 பேர் உயிரிழப்பு.?

Share via

More stories

Logo