விஜய் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 45 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் காசோலைகளை வழங்கினர். கடந்த செப்., 27ஆம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அரசு வழங்குகிறது.
Tags : விஜய் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி



















