கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் தேக்க பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர், ஹேரங்கி, ஹேமாவதி, கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை விரைவில் எட்டிவிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் உபரி நீர் வெளியேற்றம் காரணமாக கரையோர மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags :