அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - 38 கர்ப்பினிகள் கொரோனாவால் மரணம்!

கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் 33,658 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த ஒற்றை நாள் தொற்று எண்ணிக்கையாகும். தமிழகத்தில் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,65,035 ஐ எட்டியுள்ளது, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,07,789 ஆக உள்ளது என மாநில சுகாதார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 64 கர்ப்பிணிப்பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலையில் சென்னை எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் 800 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் சுமார் 2 கர்ப்பிணிப்பெண்கள் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5 கர்ப்பிணிப்பெண்களும், மே மாதத்தில் 4 கர்ப்பிணிப்பெண்களும் உயிரிழந்துள்ளனர். முதல் அலையில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு குறைவாக இருந்தாலும் இரண்டாவது அலையில் கர்ப்பிணிகள் உயிரிழப்பு அதிகளவில் ஏற்பட்டது அதிர்ச்சியை தருகிறது.
Tags :