ஆயுள் அதிகரிக்க செய்யும் அண்ணன் பெருமாள் கோவில்
திருக்கடவூர் என்றாலே நம் நினைவிற்கு வருவது 60 வயது 80 வயது நிரம்பியவர்கள் அமிர்தகடேஸவரர்-அபிராமி தாயாரை தரிசித்து தம்ஆயுளை நீட்டிக்க செய்யும் சைவ திருத்தம் என்கிற எண்ணம் பளிச்சென்று தோன்றும்.இதே போன்று வைணவத்தைபின் பற்றுகிறவர்கள் தம் ஆயுளை நீட்டிக்க வெள்ளக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் அண்ணன் பெருமாளை சேவிக்க வருவர் .இக்கோவில் உருவானது பற்றி புராண வரலாறு வழக்கமாக சொல்லப்பட்டு வருகிறது.சிவன் பார்வதியின் தந்தையாகிய தச்சனின் வேள்வியை அழித்துவிட்டு ஊழித்தாண்டவம் ஆட....அந்நேரத்தில் அவரது தலைமுடியிலிருந்து பதினொரு முடிகள் உதிர்ந்து இத்தலத்தில் விழுந்ததாகவும் அதிலிருந்து ருத்ரர்கள் தோன்றினார்கள் .சிவனின் கட்டுக்கடங்காத ஊழி கூத்தால் உலகம் அழிந்து போய்விடக்கூடுமென அஞ்சிய தேவர்கள் பெருமாளிடம் முறையிட...பெருமாள் சிவன் முன்னே எழுந்தருள...சிவன் தம் கோபத்தை குறைத்து அமைதியானார்.முழுமுதலோனாகிய ஈஸ்வரன்தன்னில் தோன்றிய பதினோரு உருவங்களும் இங்கேயே... இத்தலத்திலே எழுந்தருள பெருமாளிடம் வாய்மலர்ந்தார்.சிவன் வேண்டியதால் திருநன்கூர் பதினோரு திவ்ய தேசங்களாக காட்சி நல்கு கின்றன .திருமங்கை ஆழ்வார் தம் பாடலில்திருப்பதி வேங்கடவளை அண்ணன் என்று பாடியது போல் இந்த கோவில் பெருமாளையும் அண்ணன் என்று அழைத்ததால் இத்தலமும் அண்ணன் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது.இத்தலத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சீனிவாசன் எனும் நாமமும் உண்டு. திருப்பதி சென்று ஏழுமலையானைதரிசிக்கஇயலாதவர்கள் இத்திவ்ய சேத்திரத்தில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.ஆயூளை அதிகரிக்கவரும் பக்தர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக ஒரு புராண கதை சொல்லப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில்,துந்துமாயன் சூரிய வம்சத்தில் பிறந்த அரசன். அவனுக்கு குழந்தை பேறு வாய்க்கப்பெறாமல்இருந்த காரணத்தால் ,புத்திர காமேட்டி யாகம் -வேள்விகளை செய்தான் .இதன் பயனாக அவனுக்கு ஓர் மகன் பிறந்தான்மகனின் ஜாதகத்தை கணித்துப்பார்த்த சோதிடர் அவன் ஒன்பது வயதில் மரணிப்பான் என்று கூற...மன்னன் மனம்
வருந்தினான்.இதை மாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்து...வசிட்டரிடம் சென்று விவரம் கூற.அவர் மன்னர்,அரசி என புடைசூழ...பல கோவில்களுக்குச்சென்று வழிபட்டு பலாசவனம் என்று அழைக்கப்படும் இத்தலத்திற்கு வந்து அங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களிடம் விசயத்தை சொல்ல..அவர்கள் சுவேதனுக்கு மிருத்யுஞ்சய மந்திரத்தைஉபதேசிக்க. ...இந்த மந்திரத்தை எங்கே சென்று உச்சரித்தால் பலன் கிடைக்கும் என சுவேதகன் வினவ,அவர்கள் இந்தபலாசனத்தின் ஒருபகுதியில் பிருத்தர் ஆஸ்ரமம் உள்ளது.அதனருகில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் தீர்த்தத்திற்குசென்று மந்திரத்தை ஒதியினால் நீ மரணத்தை வெல்வாய் என்று சொன்னார்கள்.அவர்களின் கூற்றுப்படியே சுவேதகன்ஐப்பசியிலிருந்து கார்த்திகை ஏகாதேசி வரை தவமிருக்க..துவாதசியன்று பெருமாள் காட்சி தந்து ...அவனின் அற்பஆயுளைநீக்கி நீண்ட ஆயுளை வழங்கினார்.இதன் பொருட்டே பக்தர்கள் தங்கள் ஆயுளை நீட்டிக்க இப்புண்ணிய தலத்திற்கு வந்து அண்ணணன் பெருமாளை வணங்கி செல்கிறார்கள்
Tags :