உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ரஞ்சித்

by Staff / 21-10-2023 01:28:37pm
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ரஞ்சித்

தன்பாலின திருமணம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "உலகின் பல இடங்களில் தன்பாலின திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாக இருக்கிறது. அப்படியிருக்க, இந்தியாவில் மட்டும் எதற்கு எதிர்ப்பு..? இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை உள்நோக்கங்கள் கொண்ட தீர்ப்பாகவே பார்க்கிறேன்" என்று கருத்து தெரிவித்துள்ளார். தன்பாலின திருமணம் குறித்து பா ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories