பந்தயம் கட்டி மது குடித்த இளைஞர் பரிதாபமாக பலி

by Editor / 17-09-2025 02:46:46pm
பந்தயம் கட்டி மது குடித்த இளைஞர் பரிதாபமாக பலி

கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மது குடிக்கும் போட்டியில் கலந்துகொண்டு, உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் (21) என்ற இளைஞர் நண்பர்களிடம் ரூ.10,000 பந்தயம் கட்டி, தண்ணீர் கலக்காமல் 5 பாட்டில் மதுவை குடித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்தர். அவரை நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததால் நண்பர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

 

Tags :

Share via