இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் இரும்பு கம்பியால் மூன்று பேர் தாக்கி கொலை.
நேற்று இரவு கும்முடிபூண்டி அருகே பேத்தி குப்பத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் சிவகுமார் என்பவர் மர்ம நபர்களால் இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் முகாம் மேலாண்மை குழு தலைவராக உள்ளார். முகாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகளை ஒதுக்குவது தொடர்பாக சில நபர்களுக்கும் இவருக்கும் இடையே முன்விரோதம் மற்றும் தகராறு காரணமாக இக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு அன்று சிவகுமார் முகாமிற்குள் நடந்து சென்ற பொழுது மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் மூன்று பேர் அவரை தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்தக் கொலையை கண்டித்தும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரியும் முகம் குடியுரிப்பாளர்கள் என்று ஜி என் டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் ,அப்பகுதி முழுவதும் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளுவர் மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது கொலை தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
Tags :



















