வால்பாறையில் புலி வயது மூட்பின் காரணமாக இறந்த புலி தீயிட்டு எரிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகம், தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவு தி/வா. டாடா காப்பி லிமிடெட் நிர்வாகத்திற்கு உட்பட்ட வில்லோனி எஸ்டேட் கள எண்: 12ல் தேயிலைத் தோட்டச் செடிகளின் நடுவில் இறந்த நிலையில் ஒரு புலி கண்டறியப்பட்ட நிலையில், இன்று மாவட்ட வன அலுவலர் கூடுதல் பொறுப்பு கோவை கோட்டம் அவர்களது தலைமையில் வனச்சரக அலுவலர்கள் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி, வனச்சரக அலுவலர், தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு, .சீனிவாசன் வினோத் (WWF) மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில், வெண்ணிலா, வன கால்நடை அலுவலர், கோவை, சதாசிவம், உதவி கால்நடை உதவி மருத்துவர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முகமது சுல்தான் நாசர், கால்நடை உதவி மருத்துவர், வால்பாறை, ஆகியோர்களால் புலி இறந்து கிடந்த இடத்தில் புலியின் கோரைப்பற்களும் முன்னங்கால் பின்னங்கள் நகங்களும் இருப்பது தணிக்கை செய்யப்பட்டு மேற்கண்ட குழுவினர் முன்னிலையில் புலியின் உடலை உடற்கூராய்வு செய்ய ஏற்றவாறு சமதளப் பகுதிக்கு கொண்டு மேற்கண்ட மருத்துவ குழுவினரால் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இறந்தது பெண் புலி எனவும் அதன் வயது சுமார் 12 முதல் 15 வரை இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டது. பின்னர் ஆய்வக பரிசோதனைக்காக புலியின் உடலில் இருந்து உடல் உறுப்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து உடற்கூராய்வு செய்யப்பட்ட புலியின் உடலானது மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) கோவை தலைமையில் வனச்சரக அலுவலர்கள் வால்பாறை மற்றும் மானாம்பள்ளி, வனச்சரக அலுவலர், தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு, அதிகாரிகள் முன்னிலையில் உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்ட புலியின் உடலானது அதன் தோலுடன் கோரைப்பற்கள் மற்றும் முன்னங்கால் பின்னங்கால் நகங்களுடன் சம்பவ இடத்திலேயே முழுவதுமாக எரித்து சாம்பலாக்கப்பட்டது.
Tags : வால்பாறையில் புலி வயது மூட்பின் காரணமாக இறந்த புலி தீயிட்டு எரிக்கப்பட்டது.



















