வேளாங்கண்ணி விடுதியில் அறை எடுத்து தங்கிய பெண் உள்ளிட்ட 3 பேர் தற்கொலை..காரணம்..?

by Staff / 01-11-2025 09:03:24pm
வேளாங்கண்ணி விடுதியில் அறை எடுத்து தங்கிய பெண் உள்ளிட்ட 3 பேர் தற்கொலை..காரணம்..?

நாகை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு சொந்தமான ஜோசப் புதிய விடுதியில் தங்கி இருந்த மூவர் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரம், பாதிரிபுரத்தைச் சேர்ந்த லோகநாதன் (45), விஜயகுமாரி (44), கலியபெருமாள் (49) ஆகிய மூவரும் அக்டோபர் 29-ஆம் தேதி  வேளாங்கண்ணி ஜோசப் விடுதியின்  அறை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.இந்நிலையில் இன்று அந்த அறைக்கு  அருகிலிருந்தவர்கள்,கலியபெருமாள் தூக்கிட்டு இறந்தும், லோகநாதன் மற்றும் விஜயகுமாரி இருவரும் விஷம் அருந்தி இறந்தும் கிடந்ததாக தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகம் உடனே வேளாங்கண்ணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தது. காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் மரணமடைந்த கலியபெருமாள் மற்றும் விஜயகுமாரி ஆகியோர் கணவன் மனைவியர் என்றும், லோகநாதன் அவர்களின் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது.மூவரும் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு கடிதம் எழுதி விட்டு உயிரிழந்துள்ளது  காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.வேளாங்கண்ணி போலீசார் மூவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

 

Tags : வேளாங்கண்ணி விடுதியில் அறை எடுத்து தங்கிய பெண் உள்ளிட்ட 3 பேர் தற்கொலை..காரணம்..?

Share via