யாராலும் திருட முடியாத சொத்து கல்வி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்ட்ங்கள் வழங்கினார்.தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் எத்தனையோ விழாக்களில் தான் கலந்து கொண்டிருந்தாலும், பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.மேலும், முதலமைச்சராக இல்லாமல், இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவன் மற்றும் உங்கள் சீனியர் என்கிற முறையில் இந்த விழாவில் தான் கலந்து கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தான் மிசா கைதியாக இருந்த போது போலீஸ் பாதுகாப்புடன் வந்து இங்கு தோவு எழுதியதை நினைவு கூர்ந்தார்.கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து எனக்கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலக் கல்லூரியில் 2000 பேர் அமரும் வகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம் அமைத்து தரப்படும் எனக் கூறினார்.
Tags :



















