விண்வெளிக்கு செல்கிறார் அமேசான் நிறுவனர்

by Editor / 08-06-2021 07:15:33am
விண்வெளிக்கு செல்கிறார் அமேசான் நிறுவனர்

ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான விண்கலங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் விண்வெளி சுற்றுலாவுக்கு மனிதர்களை அழைத்து செல்வதற்காக நியூ ஷெப்பர்ட் என்ற விண்கலத்தை தயாரித்துள்ளது. இதில் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் விண்வெளிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். சுமார் ரூ.20 கோடி ஏலத்தில், முதன்முறையாக ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு செல்லவிருப்பதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாக்ராம் பதிவில், ''நியூ ஷெப்பர்ட் விண்கலம் மூலம் விண்வெளிக்கு செல்ல இருக்கிறேன். ஜூலை 20ம் தேதியன்று எங்களுடைய விண்வெளி பயணம் நிகழும்'என்று தெரிவித்துள்ளார். இந்த ஏலத்தில் பங்கேற்று விண்வெளி சுற்றுலா செல்ல 143 நாடுகளை சேர்ந்த 6,000 பேர் பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories