“இஸ்லாமிய சொந்தங்களுக்கு பக்ரீத் வாழ்த்து” - தவெக விஜய்

by Staff / 17-06-2024 11:37:22am
“இஸ்லாமிய சொந்தங்களுக்கு பக்ரீத் வாழ்த்து” - தவெக விஜய்

இஸ்லாமியர்களின் தியாகப் பெருநாளான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது ‘X’ தளத்தில் பக்ரீத் வாழ்த்து கூறியுள்ளார். அதில், “அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via