பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட பணம் இல்லை.. தந்தை தற்கொலை..

by Staff / 17-06-2024 11:39:32am
பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட பணம் இல்லை.. தந்தை தற்கொலை..

ஈரோடு சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வேலுச்சாமி (43). இவருக்கு 6ம் வகுப்பு, 4ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு வேலுச்சாமியிடம் அவரது மனைவி சுருதி, மகன்கள் இருவரும் பள்ளி கட்டணம் செலுத்தாததால் அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என கூறியுள்ளார். பணம் இல்லாததால் மனவேதனையில் இருந்த அவர், இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via