தொகுதி எல்கை தெரியாமல் நெல்லை தொகுதியில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தென்காசி எம்.பி.

by Editor / 09-07-2024 10:08:30am
 தொகுதி எல்கை தெரியாமல் நெல்லை தொகுதியில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தென்காசி எம்.பி.

தனது தொகுதி எல்கை தெரியாமல் நெல்லை தொகுதியில் சென்று, தென்காசி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோருடன்,. தென்காசி எம்.பி.  டாக்டர் ராணிஸ்ரீகுமார், எம்.எல்.,ஏ.க்கள் பழனிநாடார் (தென்காசி), ராஜா (சங்கரன்கோவில்) மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இவ்விழா நடைபெற்ற கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியானது நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு நடைபெற்ற அரசு விழாவில்இப்பகுதிக்குட்ட எம்.பி. ராபர்ட்புரூஸ், மற்றும் எம்.எல்.ஏ மனோஜ்பாண்டியன் கலந்து கொள்ள வில்லை. இருப்பினும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத எம்.பி. மற்றும் எல்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட நிலையில், இவ்விழாவில் பேசிய தென்காசி எம்.பி. டாக்டர் ராணி, தனது பேச்சை முடிக்கும் சமயத்தில் தனக்கு வாக்களித்த வாக்காளர்ளுக்கு நன்றி எனக்கூறி; அமர்ந்தார்.  தனது தொகுதி எல்கை எந்த ஊர் வரை உள்ளது என்று தெரியாமலேயே, நெல்லை தொகுதிக்குள் வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்ததால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
தென்காசி தொகுதியில் போட்டியிட்ட ராணிஸ்ரீகுமார் வாக்கு கேட்டகவே நிறைய பகுதிகளுக்கு செல்ல வில்லை என்றும், வெற்றி பெற பிறகு கூட இது நாள் வரை வாக்காளர்களுக்கு நன்றி சொல்லவும் வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ள நிலையில், தற்போது தொகுதி எல்கை கூட தெரியாமல் இருப்பது பொதுமக்கள் மட்டுமின்றி அங்கு கூடியிருந்த திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்பை ஏற்படுத்தியுள்ளது.இதே போல் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், தென்காசியில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்பதில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ள நிலையில், தனது தொகுதிக்கு சம்பந்தமில்லை வேறு தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. அரசு விழாவில் வாக்காளருக்கு நன்றி தெரிவித்தது முணுமுணுக்கச் செய்தது

 

Tags : தொகுதி எல்கை தெரியாமல் நெல்லை தொகுதியில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தென்காசி எம்.பி.

Share via