கட்சிகளுக்கு இன்று முக்கியமான நாள்.

by Editor / 26-03-2024 09:31:52am
கட்சிகளுக்கு இன்று முக்கியமான நாள்.

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம், மைக் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. மைக் சின்னத்துக்கு பதிலாக படகு அல்லது பாய்மரப் படகு சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார். எனவே இன்று இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் இறுதியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கும் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories