by Staff /
07-07-2023
03:02:14pm
கர்நாடக மாநில பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வரும் நிதியமைச்சருமான சித்தராமையா தாக்கல் செய்தார். முன்னதாக, 2013 முதல் 2018 வரை 6 பட்ஜெட்டுகளை அவர் முதல்வராக இருந்தபொழுது தாக்கல் செய்துள்ளார். இது அவரது 7வது பட்ஜெட் ஆகும். நிதியமைச்சராக அவரது 14வது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் உரை நிகழ்த்திய சித்தராமையா, மேகதாது அணை விவகாரத்தில் விரைவில் அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், மேகதாது சமன்படுத்துதல், குடிநீர் திட்டத்திற்கான அனுமதி பரிந்துரை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Tags :
Share via