சிறுவன் படுகொலை விவகாரம் - காரைக்காலில் இன்று கடையடைப்பு

by Editor / 09-09-2022 11:51:41am
சிறுவன் படுகொலை விவகாரம் - காரைக்காலில் இன்று கடையடைப்பு

காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவன் பாலம ணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், போலீசாரும், மருத்துவர்களின் அலட்சியத்தால் மாணவன் பாலமணிகண்டன் இறந்துவிட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தினர். ஆனால், அரசு மருத்துவர்களின் கவனக்குறைவால் சிறுவன் உயிரிழக்கவில்லை என்று மருத்துவ குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.இதனால், ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

 

Tags :

Share via