சாதனைகள் படைத்த நித்தியானந்தா

நித்தியானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும் அவை ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கைலாசா ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் உச்சரித்தது, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது, ஒரு ஆசிரியரால் வெளியிடப்பட்ட அதிகபட்ச புத்தகங்கள், ஒரு குழுவால் செய்யப்படும் அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், ஆன்மிக அமைப்பால் கொண்டாடப்பட்ட அதிகபட்ச பிரம்மோத்ஸவங்கள், ஒரு குழுவால் பத்மாசன யோகா ஆசனத்தை நடத்துவதற்கான நீண்ட காலம் மற்றும் ஒரு தனிநபரால் அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது ஆகிய சாதனைகளை அவர் படைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :