மைதானத்தில் குண்டுவெடிப்பு - 10 வீரர்கள் பலி

by Staff / 30-10-2022 12:14:05pm
 மைதானத்தில் குண்டுவெடிப்பு - 10 வீரர்கள் பலி

ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த வெடி விபத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் கொல்லப்பட்டனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

 

Tags :

Share via

More stories

Logo