கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவானதே - தமிழிசை

கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவானதே என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, "சர்வதேச சந்தையில் 60%-க்கு மேல் கேஸ் விலை ஏற்றம் செய்யப்பட்டதால், இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது. அதோடு ஒப்பிடுகையில் இந்த கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவானதே. இருப்பினும் விலையை குறைக்க மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Tags :