நெய்வேலி என்எஸ்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துவதற்கு  எதிர்ப்பு - 7 ஆயிரம்  போலீசார் குவிப்பு.

by Editor / 11-03-2023 08:04:01am
நெய்வேலி என்எஸ்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துவதற்கு  எதிர்ப்பு - 7 ஆயிரம்  போலீசார் குவிப்பு.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி  நிறுவனம், தற்போது கடலூர் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கரிவெட்டி, கத்தாழை, வளையமாதேவி, வடக்கு வெள்ளூர், அம்மேரி, ஆதான்டார்கொள்ளை, மும்முடிசோழன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து என்எல்சி மற்றும் மாவட்ட நிர்வாகம், வேளாண்துறை உள்ளிட்ட நிர்வாகத்தை கண்டித்து தங்களது எதிர்ப்பை  தெரிவித்தனர்.

மேலும்கையகப்படுத்திய நிலத்திற்கு சமமான இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டத்தில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நெய்வேலி என்எஸ்சி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்துவதற்கு  அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வளையமாதேவி பகுதியில்  சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாமகவின் முழு அடைப்பு போராட்ட அழைப்புக்காரணமாக  கடலூர் மாவட்டத்தில் முழுமையான பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி.க்கள் பாண்டியன் (விழுப்புரம்), பகலவன் (காஞ்சிபுரம்), கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்பட 8 மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள்,11 உதவி காவல் கண்காணிப்பாளர்கள், 21 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via