கவிஞர் வைரமுத்துவிற்கு இந்தியாவின் உயரிய விருதான ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது.

by Admin / 14-03-2026 05:43:35pm
கவிஞர் வைரமுத்துவிற்கு இந்தியாவின் உயரிய விருதான ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது.

கவிஞர்வைரமுத்து இந்தியாவின் உயரிய விருதான ஞானபீட விருது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஞானபீட விருது பெரும் மூன்றாவது தமிழர் வைரமுத்து. இவருக்கு முன்னர் அகிலன் 1975 ஆம் ஆண்டும் ஜெயகாந்தன் 2002 ஆண்டும் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் நாவலாசிரியர்கள். வைரமுத்து ஒரு கவிஞர். ஒரு கவிஞருக்கு அதுவும் தமிழ் கவிஞருக்கு ஞானபீட பரிசு கிடைத்திருப்பது இது முதல் முறை. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வைரமுத்து  இலக்கிய உலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கௌரவம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விருது 11 லட்சம் ரொக்க பணத்துடன் சரஸ்வதி வெங்கல சிலை மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. வைரமுத்து, ஏற்கனவே சாகித்திய அகடாமி விருதையும் பத்மஸ்ரீ. பத்மபூஷன் மற்றும் சிறந்த பாடல் ஆசிரியர்களுக்கான ஏழு முறை தேசிய விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via