தெலங்கானாவில் கொட்டித்தீர்த்த பெருமழை; குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

by Staff / 05-05-2022 01:17:35pm
தெலங்கானாவில்  கொட்டித்தீர்த்த பெருமழை; குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

சித்திப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹப்ஷிப்பூர் என்ற இடத்தில் அதிகபட்சமாக 108 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், அங்கும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம், ஒடிஷா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக சுட்டெரித்த வெயில் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். ஒடிஷா மாநிலத்தில் பள்ளி செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

 

Tags :

Share via
Logo