வெள்ளி கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப திட்டம் டிசம்பர் 2024யில்... இஸ்ரோ தலைவர் சோம்நாத்...

by Staff / 05-05-2022 01:19:59pm
வெள்ளி கிரகத்திற்கு விண்கலம் அனுப்ப திட்டம் டிசம்பர் 2024யில்... இஸ்ரோ தலைவர் சோம்நாத்...

நிலவு மற்றும் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சிகளை தொடர்ந்து, சூரிய மண்டலத்தில் அதிக வெப்பம் மிகுந்த கிரகமான வெள்ளி பற்றியும் ஆராய்ச்சி மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தொடர்புடைய இஸ்ரோ தலைவர் சோம்நாத் 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் விண்கலத்தை நிலை நிறுத்தி சல்பூரிக் அமிலங்களின் கீழிருக்கும் மர்மங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

டிசம்பர் 2024யில் பூமியும் வெள்ளி கிரகமும் அருகருகே வருவதால், குறைந்த அளவு உந்து சக்தியை பயன்படுத்தி விண்கலத்தை அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தலாம் என்றும், இல்லையென்றால் அடுத்த 2031ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதிருக்கும் என்பதால் குறைந்த காலகட்டத்தில் இத்திட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக சோம்நாத் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via

More stories