தகதகக்கும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது.

நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் - இறக்கம் கண்ட நிலையில்,இன்று (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 112 உயர்ந்து ரூ. 43, 840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 14 உயர்ந்து ரூ. 5, 480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 47, 600 ஆகவும் கிராமுக்கு ரூ. 5,950 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags : தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது.