கேரள உளளாட்சித்தேர்தல் ,காங்கிரஸ் பலமாகிறது.
கேரளா உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடந்தன. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணிபெரும் பின்னடவை சந்தித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை புரிந்துள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கொச்சி, கொல்லம் ,திருச்சூர், கண்ணூர் நான்கு மாநகராட்சிகளை கைப்பற்றியுள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணி கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. 101 வார்டுகளை கொண்ட இந்த மாநகராட்சியின் பாஜக 50 இடங்களை வென்று முதல் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் 45 ஆண்டு கால இடதுசாரிகளின் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது .இங்கு இடதுசாரி கூட்டணி 29 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 54 நகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது இடதுசாரி கூட்டணி 2 இடங்களிலும் பாஜக கூட்டணி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 55 ஊராட்சிகளிலும் இடதுசாரி கூட்டணி 340 இடங்களிலும் பாஜக கூட்டணி 26 இடங்களிலும் வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஏழு மாவட்ட ஊராட்சிகளை கைப்பற்றியுள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான கேரளா சட்டசபை தேர்தலுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சி புதிய தெம்பை பெற்றுள்ளது. அதேபோன்று திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி புதிய நிகழ்வை உருவாக்கியுள்ளது.
Tags :


















