பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பாஜகவின் நாடாளுமன்ற குழுவால் இந்த முக்கிய பொறுப்புக்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கட்சியின் அடுத்த முழு நேர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நிதின் நபின் செயல் தலைவராக பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நிதின் நபின் பீகார் மாநில சாலை மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார். இவர் பாட்னாவின் பாங்கிப்பூர் தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















