ராகுல் காந்தி வெளிநாடு பயணம்

by Editor / 17-11-2021 02:12:31pm
ராகுல் காந்தி வெளிநாடு பயணம்

 ராகுல் காந்தி திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.  தனிப்பட்ட பயணமாக அவர் சென்று இருக்கிறார். 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர் இந்தியா திரும்புவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் ஏற்பட்ட மோதலை அடுத்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மேற்கொண்ட சமரச முயற்சியின் காரணமாக இருவரும் ஒன்றிணைந்தனர்.

சச்சின் பைலட் தனது ஆதரவாளர்கள் பலரை மந்திரி சபையில் இடம் பெற செய்ய முயற்சி மேற்கொண்டார். எனவே மந்திரி சபையை விஸ்தரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவருமே சோனியா காந்தியை சந்தித்து பேசினார்கள். அப்போது யார், யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது பற்றி உறுதி செய்தனர்.

ஆனால் ராகுல் காந்தியினுடைய ஒப்புதல் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அந்த பணி தாமதமாகி உள்ளது. அவர் திரும்பியதும் ஒப்புதலுக்கு பிறகு ராஜஸ்தான் மாநில மந்திரி சபை விஸ்தரிக்கப்பட இருக்கிறது.

 

 

Tags :

Share via

More stories

Logo