பள்ளி மாணவியை கடத்த முயன்ற 4 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

by Editor / 06-04-2022 10:57:45pm
பள்ளி மாணவியை கடத்த முயன்ற 4 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தில் பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கும் கீழ் மதுரை சதீஷ் என்பவருக்கும் இடையே அலைபேசி மூலம் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் செல்வதற்காக சதீஷ்  தனது நண்பர்களுடன் காக்கூர் பகுதியில் சுற்றி திரிந்து  பள்ளி மாணவியை கடத்த முற்பட்ட போது மாணவியின் தந்தை சகோதரன் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முதுகுளத்தூர் போலீசார் சதீஷ், மணிபாரதி, அஜித்குமார், பிரபு ஆகிய  4 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo