பாஜக பிரமுகர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. 

by Editor / 06-04-2022 11:08:06pm
பாஜக பிரமுகர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. 

 கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், பாஜக நெசவாளர் பிரிவு செயலாளராக உள்ளார். மேலும் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் பாஜக உட்கட்சி தேர்தலில் ஜெயக்குமார் போட்டியிட கூடாது எனக்கூறி பாஜகவை சேர்ந்த கார்த்திக், முத்துக்குட்டி மற்றும் மேலும் இரண்டு பேர், ஜெயக்குமாரின் போட்டோ ஸ்டூடியோவிற்குள் புகுந்து சராமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் கத்தியால் குத்தி தப்பிச் சென்றனர்.சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் அளித்த புகார் அடிப்படையில் கார்த்திக், முத்துகுட்டி உள்ளிட்ட 4 பேர் மீது ராமநாதபுரம் போலீசார் 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

பாஜக பிரமுகர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. 
 

Tags :

Share via

More stories