நிர்வாண படங்களை வெளியிடுவேன்.. போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பெண்ணுக்கு மிரட்டல்

சென்னை: நிர்வாண படங்களை வெளியிடுவேன் என போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் கையை பிடித்து முறுக்கி அப்பெண்ணின் நிர்வாண படங்களை வெளியிடுவேன் என செந்தில் மிரட்டியுள்ளார். இந்நிலையில், போலீசார் எச்சரித்தும் கேட்காத செந்தில் தொடர்ந்து அப்பெண்ணை மிரட்டியுள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Tags :