தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு

தமிழகத்தில் முதன்முதலாக கோயம்புத்தூரை அடுத்த மேட்டுப்பாளையம் நகராட்சியில் கழிவுநீரை சுத்திகரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இரண்டாவதாக குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் கீழ்பம்மம் பகுதியில் 50 சென்ட் நிலப்பரப்பில் செப்டிக் டேங்க் கழிவுகள், மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர்களை சுத்திகரிக்கும் வகையில் நவீன இயந்திரங்கள் பொருத்தி ஐந்துக்கும் மேற்பட்ட செப்டிக் டேங்குகளுடன், இரண்டு பில்டர்களுடன், பிரம்மாண்டமாக கழிவுகளை சுத்திகரிக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 கோடி 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியினை அப்போது குழித்துறை நகரமன்ற தலைவர் பொன். ஆசைதம்பி தொடங்கிவைத்தார். இந்நிலையில் பணி நடைபெற்று வந்ததை அடுத்து அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டது. தற்போது அதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. அதனை நகரமன்ற தலைவர் பொன். ஆசைதம்பி, நகரமன்ற ஆணையாளர் ராஜேஸ்வரன், பொறியாளர் குறள்செல்வி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Tags :